பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பொலிஸ்மா அதிபருக்கு வழங்கி ஏகாதிபதிபத்திய பொலிஸ் இராஜ்ஜியம் ஒன்றை ஏற்படுத்த அரசு முயற்சிப்பதாக பிரதான எதிர்க்கட்சி குற்றம்சாட்டிய நிலையில் ஆளும் மற்றும் எதிர் தரப்புக் இடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது
பாராளுமன்றில் நேற்று எதிர்க்கட்சியின் பிரதம கொறரடாவான கயந்த கரு
ணாதிலக்க எம்.பி. விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றினார்.
சுயாதீன ஆணைக்குழுவாக நிறுவப்பட்டுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரத்தை வெளியாட்களுக்கு வழங்க அரசு முயற்சிப்பதாக தெரியவருகிறது. இது தொடர்பான உண்மைத் தன்மை மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சபைக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
இதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சிஎம்.பி தயாசிறி ஜயசேகர,
பொலிஸ் நிலையபொறுப்பதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பொலிஸ் ஆணைக் குழுவுக்கே உள்ளது . ஆனால் தற்போது பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேர் எந்தக் காரணமும் இன்றி இடமாற்றப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று எந்த வேலைத் திட்டமும் இல்லாமல் விசேடபிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர் என்றார்.
இதனைஎடுத்து எழுந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ,
எமது நாடு பொலிஸ் இராஜ்ஜியம் அல்ல. ஜனநாயக நாடு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பொலிஸ் ஆணைக்குழுவை அரசாங்கத்தின் கைபொம்மையாக ஆக்கிக்கொள்ளமுடியாது. பொலிஸ் ஆணைக்குழு அதிகாரங்களை தனி நபரான பொலிஸ்மா அதிபரின் கைகளுக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
இதனையடுத்து எதிர்க்கட்சி எம்.பி. சுஜீவ சேனசிங்க தெரிவிக்கையில்,
தற்போது பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்களை வேறு தரப்பினருக்குவழங்க எடுக்கும் நடவடிக்கை, ஏகாதிபத்திய ஆட்சிக்கே இட்டுச்செல்லும். அதனால் இதற்கு அனுமதிக்க கூடாது என்றார்.
இதற்கு பதிலளித்த அரச தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

, பொய்யான பீதி ஒன்றை ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. நாங்கள் ஜனநாயக முறையில் செயற்பட்டு வருகிறோம். அதற்கே மக்கள் ஆணை இருக்கிறது.
பொலிஸ் இடமாற்றம் மேற்கொண்டிருப்பது பொலிஸ் ஆணைக் குழுவாகும். இதில் யாருக்காவது அநீதி ஏற்பட்டிருந்தால், அதுதொடர்பில் மேன்முறையீடு செய்ய இடமொன்று இல்லை. அதுவே பிரச்சினையாக இருக்கிறது என்றார்.
அமைச்சரின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த தயாசிறி ஜயசேகர எம்.பி. பொலிஸ்

ஆணைக்குழுவே பொலிஸ் இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவிப்பது பொய் . இவ்வாறு இந்த சபையை பிழையாக வழிநடத்த இடமளிக்க முடியாது என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி எம்.பி ரஞ்சித் மத்தும பண்டார
களுத்துறையில் இடம்பெற்ற பொலிஸ் நிகழ்வொன்றின்போது, ஜனாதிபதி பொலிஸ் ஆணைக்குழுவை அச்சுறுத்தி இருக்கிறார். அரசாங்கம் ஏகாதிபத்திய வாதத்துக்கு செல்லவே முயற்சிக்கிறது. பொலிஸ் ஆணைக்குழு ஒருபோதும் வெளிநபர்களுக்கு அதிகாரங்களை வழங்கியதில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்தஜயதிஸ்ஸ ,

யாரும் குழப்பமடைய தேவையில்லை. பொலிஸ் இடமாற்றங்களின்போது யாருக்காவது அநீதி ஏற்பட்டால், அது தொடர்பில் மேன்முறையீடு செய்யமுடியுமான முறையிலே இடமாற்றங்கள் இடம்பெறுகின்றன என்றார்